Total Pageviews

Tuesday, December 7, 2010

55.தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?

55.தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?





              தாம்பிரம் தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.அதேபோல் பஞ்ச பூதத்திலே ஒன்றான கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. 
    
        
             
       தாம்பிர பாத்திரத்தில் ஊறியனீரில் கண்கள் கழுவி வரும்போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு,கண்ணுக்கு பலனளிக்கிறது.

       

  எனவே தான் தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது!

Monday, December 6, 2010

53.சில வகை மீன்களை சாப்பிடக்கூடாது குறிப்பாக கர்ப்பிணி சாப்பிடக்கூடாது ஏன்?


        53.சில வகை மீன்களை சாப்பிடக்கூடாது குறிப்பாக கர்ப்பிணி சாப்பிடக்கூடாது ஏன்?




                                      மீன்களில் polyunsaturated fatty acids (PUFAs) அதிகளவு இருப்பதால்,அவை மிகச்சிறந்த அசைவ உணவுகளில் ஒன்றாக பரிந்துரைக்கப்படுகிறது.
         

                                     மேலும் இதில் long chain omega-3 PUFAs இருப்பதும் சிறப்பு. இதுவானது, உடலுடைய நரம்பு மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பட உதவுகிறது.

                                   இந்திலையில் மீன்களில் methylmercury என்கிற நச்சு இருப்பதாகவும்,கர்ப்பிணிகள் சில வகை மீன்களை உண்ணும்போது, mercury நச்சாக செயல்பட்டு,கருவில் இருக்கும் குழந்தை வரை பாதிப்பை உண்டாக்குவதாக ஆய்வுக்ளே கூறுகின்றனர்.
  



எனவேதான் சில வகை மீன்களை சாப்பிடக்கூடாது.
  

52.வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்.ஏன்?




52.வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்.ஏன்?
    
           வாழையிளம் பிஞ்சில் protopectin, Starch,chlorophyll and acid ஆகியவை உள்ளன.
        


           இதில் protopectin, pectin வும், Starch- sucrose வும், chlorophyll – anthrocyanin வும் வாழைப்பழமாக மாறும்போது மாற்றம் அடைகிறது. 


           மேலும்வாழையிளம் பிஞ்சில் உள்ள உயிர்சத்துக்கள், மூளை செல்களை தூண்டுவது கண்டறியப்பட்டுள்ளது.

          வாழைபழத்திலுள்ள அதிக அளவு sucrose நீரிழிவு நோயாளிக்கு பாதிப்பினை உண்டாக்கும்.

           அதே சமயம்,வாழை பிஞ்சில் இருக்கும் நார்சத்துகள், protopectin நீரிழிவு நோயாளிக்கு நல்லதே.

51.வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து குழந்தைகளுக்கு பொட்டாக இடுவதன் சிறப்பு என்ன?




 51.வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து குழந்தைகளுக்கு பொட்டாக இடுவதன் சிறப்பு என்ன?

  

            பொதுவாகவே தமிழ் சமூகத்தில்,தாய்மார் தம்முடைய குழந்தைகளுக்கு திருஸ்டி பொட்டு இடுவது வழக்கு.அதுவும்,வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து,இடுவது வழக்கம்.இதற்கான அறிவியல் விளக்கம் காண்போம். 
   

         வசம்புக்கு பிள்ளைமருந்து என்ற வேறு பெயரும் உள்ளது.இது குறிப்பாக குழந்தைக்கு உண்டாகும் நோய்களுக்கு நல்லது மட்டுமல்லாது,குழந்தைகளின் நோய் எதிர்புசக்தியை அதிக்ரிக்க செய்கிறது.
    
   மேலும், நரம்புசெல்களை செயல்படுத்தி,குழந்தையின் மூளையின் செயல் பாட்டை அதிகரிக்கும்.பேச்சு துவக்கத்திற்கு முக்கிய பங்கினையுமும் வகிக்கிறது.திக்குவாய் நோய்க்கு சிறப்பாக மருத்துவமாக கூறப்படுகிறது..

   எனவேதான், வசம்பு சுட்டக் கரி நீரில் குழைத்து குழந்தைகளுக்கு பொட்டாக 
 இடப்படுகிறது.
          

50..”மண்பரவு கிழங்குதளிற் கருணையின்றி புசியோம்”.ஏன்?

50.”மண்பரவு கிழங்குதளிற் கருணையின்றி புசியோம்”.ஏன்?


                    சித்த மருத்துவத்தில் தேரன் கூறிய பிணியணுகா விதியில் மண் பரவும் கிழங்குகளில் கருணைகிழங்கு தவிர பிறவன உண்ணகக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.




              கருணை கிழங்கின் பயன்களை இனி காண்போம்.




glucomaan 
    • இதில் நார்ச்சத்து மற்ற கிழங்குகளை விட அதிகம்.எனவே இதனை உடல் எடை குறைப்பதில் மிகச் சிறந்தது.
    • இதில் அதிக அளவுள்ள omega 3 fatty acids, கெட்ட கொலஸ்டீராலை LDL போக்கி, நல்ல  கொலஸ்டீராலை HDL தருகிறது.
    • இதில் சர்க்கரை அளவு குறைவாக very low glycemic index.
            இருப்பதால்- நீரிழிவு நோய்க்கு நல்லது.
    • இதிலுள்ள Diosgenin என்கிற வேதிப்பொருள் புற்று நோய் செல்களை எதிர்க்கும் திறன் உடையது.
    • இதில் Glucomannan என்கிற வேதிப்பொருள் மலக்கட்டினை போக்குகிறது.
    • இது high Vitamin B6 அடங்கியுள்ளதால்,இது பெண்களின் pre-menstrual syndrome நல்லது!
    • மேலும் copper, zinc, selenium, phosphorus, magnesium and potassium ஆகியவை அடங்கியுள்ளன   
    ,


      

49. பகற்தூக்கம் கூடாது.ஏன்?

49. பகற்தூக்கம் கூடாது.ஏன்?

         
        பகலில் தூக்கம் 18 வகையான வாதரோகங்கள் தோன்றும் என சீவரட்சாமிர்தம் பிற சித்த மருத்துவ நூல்களும் வலியுறுத்துகின்றன.
          
              
                 
    மனித உடலில் உயிரியல் கடிகாரம் இயங்கிவருவதாகவும்,அதற்கு பெயர் circadian rhythmஎனவும் நவீன மருத்துவ அறிவியலால் கண்டரியப்பட்டதொரு உண்மை. இந்த சுழல்வு மனித உடலில் தூக்கம்- விழிப்பு,வெப்பம்- குளிர்ச்சி, ஹார்மோன்கள் சுரப்பு இவைகளை கட்டுப்படுத்தி சம நிலையை காக்கிறது.




              பகலில் தூக்கம் செய்யும்போது circadian rhythm பாதிக்கப்பட்டு,மனித உடலில் தூக்கம்- விழிப்பு,வெப்பம்- குளிர்ச்சி சம நிலை, ஹார்மோன்கள் சுரப்பு இவைகளில் மாறுதல் ஏற்படுகிறது.

                 இதனால்,உணவு விருப்பமின்மை,மன அமைதியின்மை,வேலையில் நாட்டமின்மை உண்டாகின்றது.

  எனவேதான், பகற்தூக்கம் கூடாது.

47.சித்திரை மாத துவக்கத்தில் தமிழ் கோயில்களில் வேப்பம் பூ ஊறிய தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. எதனால்? ுவது எக்காரணத்தால்?


47.சித்திரை மாத துவக்கத்தில் தமிழ் கோயில்களில் வேப்பம் பூ            றிய  தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. எதனால்?

                             தமிழ் மரபுப்படி, சித்திரை மாதம் பனிக்காலம் முடிந்து, வேனில் காலத்தின் தொடக்கம் ஆகையால்,உடலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்.

 
           வேப்பம்பூ உடலில் ஏற்படும் அனலை தணிக்கும் திறன் உடையதால்,வேனில் காலத்தில் நன்மை பயக்கும்.


           எனவேதான், சித்திரை மாத துவக்கத்தில் தமிழ் கோயில்களில் வேப்பம்பூ  றிய  தீர்த்தம் கொடுக்கப்படுகிறது.

Saturday, December 4, 2010

46.ஒரு முறை பொரித்த எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தகூடாது.ஏன்?



46.ஒரு முறை பொரித்த எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தகூடாது.ஏன்?      
     
               
                 ஒரு முறை பொரித்த எண்ணெய்யை மறுமுறை உபயோகிக்கும் வழக்கம் பரவலாகவே உண்டு.அவ்வாறு செய்வதால்,உடலுக்கு எங்ஙனம் தீங்கு உருவாகிறது என காண்போம்.
                   

                      ஒரு முறை பொரித்த எண்ணெய்யை மறுமுறை உபயோகிக்கும் அதிலுள்ள கொழுப்புச்சத்துகள்,உடலில் தீமை உண்டுபண்ணும் trans fat
கொழுப்புச்சத்துகளாக மாற்றமடைகின்றன.
                    
      இவை carcinogenic புற்று நோய் உண்டு பண்ணும்தன்மை உடையது.

                   எனவேதான், ஒரு முறை பொரித்த எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தகூடாது.



44.”தீப நிழலில் வசியோம்”. ஏன்?

44.”தீப நிழலில் வசியோம்”. ஏன்?




                                      ”தீப நிழலில் வசியோம்” என்ற கருத்தை ஆச்சாரக்கோவை வலியுறுத்துகின்றது.

                         தீப எரியும்போது அது இருக்கின்ற அறையின் உயிர்வளி காற்றின் அளவு குறைந்து கொண்டே சென்று, அறையின் தூய காற்றின் oxygen capacity   அளவு குறைந்து விடும். 

                      
                         தீபம் எரிகிற அறையில் தூக்கம் செய்யும் நபர்களுக்கும் மூச்சுக்கோளறு உண்டாக்கி கெடுதலை செய்யும்.

                       விளக்கு தீபம் எரிகிற அறையில் வசிக்க கூடாது என்பதை அறிவுறுத்தவே,   ”தீப நிழலில் வசியோம்” என சொல்லியுள்ளனர்.

43. சிறு நீரக பாதிப்பு நோய்யுள்ளவர்கல் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக்கூடாது.ஏன்?


43. சிறு நீரக பாதிப்பு நோய்யுள்ளவர்கல் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக்கூடாது.ஏன்?



               ஒரு வாழைப்பழத்தில்  அதிகளவான 118 g பொட்டாசியம்  அடங்கியுள்ளது.



             சோடியம், பொட்டாசியம் போன்றவையான உப்புச் சத்து அடங்கிய உணவுபோருட்களை, சிறு நீரக பாதிப்பு நோய்யுள்ளவர்கள் சாப்பிடும்போது, நோயினுடைய தீவிரம் அதிகப்படுகிறது.

                







         எனவேதான், சிறு நீரக பாதிப்பு நோய்யுள்ளவர்கள் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக்கூடாது. 

 

42.தூக்கபாதிப்பு நோயினை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் நல்லது.ஏன்?


42.தூக்கபாதிப்பு நோயினை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் நல்லது.ஏன்?

                   வாழைப்பழத்தில்  அதிகளவான tryptophan என்னும் ஒருவகை  amino acid அடங்கியுள்ளது. 






                   Tryptophan வளர்சிதை மாற்றமடையும் போது, serotonin வெளியிட செய்கிறது. 




                 Serotonin மூளையின் செயலை brain inhibiting neurotransmitter கட்டுப்படுத்துவதன் மூலமே, மூளையினை அமைதி படுத்தி மன அமைதியை கொடுக்கிறது. 

     

                   இரவில் தூக்கம் வராது தவிக்கும் நோய் உள்ளவர்களுக்கு நன்மை உண்டாக்கும்.

                   எனவேதான், தூக்கபாதிப்பு நோயினை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் நல்லது.

41.திராட்சை பழம்அதிகம் சாப்பிட்டு வந்தால் கொழுப்புசத்தை குறைக்குமா?


41.திராட்சை பழம்அதிகம் சாப்பிட்டு வந்தால் கொழுப்புசத்தை குறைக்குமா ?

         

              

                 


           திராட்சை பழத்தில்  அதிக அளவு Naringin என்கிற முக்கிய வேதிப்பொருள்   அடங்கியுள்ளது.


       





         
           
          இது தீயதான கொழுப்புச்சத்துகளை(LDL cholesterol) குறைத்து, நல்ல கொழுப்புச்சத்துகளை (HDL cholesterol)  உண்டாக்குகிறது.


                  

  


       
         இதன் மூலம் குருதி குழாயடைப்பு atherosclerosis வராது தடுக்கப்படுகிறது.          

        








  

 எனவேதான், திராட்சை பழம் அதிகம் சாப்பிட வேண்டும்.



40.பற்சிதைவிற்கு,உலர்ந்த திராட்சை சிறந்தது. எங்ஙனம் ?


40.பற்சிதைவிற்கு,உலர்ந்த திராட்சை சிறந்தது. எங்ஙனம் ?


                உலர்ந்த திராட்சையில் phytonutrient - oleanolic acid என்கிற முக்கிய வேதிப்பொருள்  உள்ளது. 




          அப்பொருள் பற்சிதைவை உண்டாக்கிற பாக்டீரியாக்கள் அழிக்கிறது.இதன் மூலம் பற்களின் பாதுகாப்புக்கே பயன்படுகிறது.





          எனவேதான், பற்சிதைவிற்கு,உலர்ந்த திராட்சை சிறந்தது.

39.கொய்யா பழம் சாப்பிட்டால் புரதகோள வீக்க வியாதிக்கு சிறந்தது. எங்ஙனம் ?

39.கொய்யா பழம் சாப்பிட்டால் புரதகோள வீக்க வியாதிக்கு சிறந்தது. எங்ஙனம் ?



       கொய்யா பழம் Lycopene என்கிற முக்கிய வேதிப்பொருள்  அடங்கியுள்ளது.



     இது anti oxidant க செயல்படுகிறது.இது செல்களை தடுத்து புரதகோள வீக்கம் ஏற்படதே தடுக்கின்றது.

      எனவேதான், கொய்யா பழம் சாப்பிட்டால் புரதகோள வீக்க வியாதிக்கு சிறந்தது

 

38.பீன்ஸ் உடலிலுள்ள கொழுப்புச்சத்தினை குறைக்கும். எங்ஙனம்?

38.பீன்ஸ் உடலிலுள்ள கொழுப்புச்சத்தினை குறைக்கும். எங்ஙனம்?
       


          பீன்ஸ் SAPONIN என்கிற முக்கிய வேதிப்பொருள்   அடங்கியுள்ளது.



     இது cholesterol இணைந்து குடலில் உறிஞ்சப்படாமலே,மலத்தின் வழியே வெளியேற்றி விடுகிறது.


     இதன் மூலம் அதிகளவு cholesterol சேராமல், உடம்பினை கெட்ட  கொழுப்புச்சத்து கேடுகள் வராது தடுக்கிறது.