Total Pageviews

Wednesday, December 1, 2010

27.பீன்சு,பாலடைக்கட்டி அதிகம் சாப்பிட்டால் பெண்குழந்தை பிறக்கும். எங்ஙனம்?

27.பீன்சு,பாலடைக்கட்டி அதிகம்  சாப்பிட்டால் பெண்குழந்தை பிறக்கும். எங்ஙனம்?


 
                கால்சியம், மக்னீசிய சத்துக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால், பெண் குழந்தை பிறக்கும் என நவீன ஆராய்ச்சிகள் நீருபிக்கின்றது. ஹாலந்து நாட்டில் உள்ள மாஸ்டிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மூலம் இதை கண்டுபிடித்துள்ளனர்..

கருவில் ஆண்-பெண் உருவாகும் வகை:
            
             கருவிலிருக்கும் குழந்தை ஆணா?பெண்ணா? என்பதை தீர்மாணிப்பது XX-XY குரோமோசோம்கள் மட்டுமல்ல.தாயின் கருப்பையில் கரு உருவாகும்போது, கரு மொட்டில்(fetus),உல்போனியன் குழாய்(Wolffian ducts) மற்றும் முல்லேரியன் குழாய்(Müllerian ducts) என்ற இரு வகையான குழாய்கள் (premitative ducts) உருவாகின்றன.
           
             இதில், உல்போனியன் குழாய்(Wolffian ducts), testosterone மற்றும் Anti- Müllerian Hormone இவற்றின் செய்கையினால்,ஆணுக்குரிய பிறப்பு உறுப்புகள் உருவாகின்றது.

              இந்த Hormone களின் செய்கைகள் அதிக அளவு இல்லாத போத அல்லது oestrogen அளவு அதிகமான வேளை, முல்லேரியன் குழாய்(Müllerian ducts),பெண் பிறப்பு உறுப்புகளை உருவாக்குகின்றது.
             
             எனவே,கருவுற்றிருக்கும் போது, தாயானவளோ, testosterone மற்றும் Anti- Müllerian Hormone இவற்றினை மட்டுப்படுத்தும் அல்லது oestrogen அளவு அதிகமான உணவு வகைகளை உண்ணும் போது பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம்.


  
             பீன்சு,பாலடைக்கட்டி அதிகளவில் உள்ள கால்சியம், மக்னீசிய சத்துக்கள் போன்ற வெதிப்பொருட்கள்  testosterone மற்றும் Anti- Müllerian Hormone அதிகமான அளவு தூண்டுவிடுவதை தடுக்கின்றன.

             இதனாலே பெண் குழந்தை வேண்டுகிறவர்கள் பீன்சு,பாலடைக்கட்டி சாப்பிட வலியுறுத்தபடுக்கின்றனர்.

No comments:

Post a Comment