Total Pageviews

Monday, November 29, 2010

16.மாலை வெயில் காய்தல் நல்லது. எங்ஙனம்?

16.மாலை வெயில் காய்தல் நல்லது. எங்ஙனம்?

  

             மாலை வெயில் காய்தல் பயன்கள் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே தேரன் சித்தர் ” வெயில் காய்ந்தார்க்கு எல்லா நோய்க்கூட்டங்களும் நீங்கும்” என தனது வெண்பா என்னும் நூலில் கூறியுள்ளார்.

             இன்றோ,ஆராய்ச்சியாளர்கள் மாலை வெயில் காய்தல் மூலம் உடலின் நீரிழிவைகுணப்படுத்தும் என்றும்,உடலிலுள்ள கால்சியம் மற்றும் விட்டமின் டி அளவினை அதிகப்படுகிறதாகவும் ஆராய்ச்சி மூலம் நீருபிக்கின்றனர்.
  
              
    
                 
வெயிலுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு : இந்திய மருத்துவர்கள் தகவல்

            புதுடில்லி : "சூரிய வெளிச்சத்துக்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளது' என, இந்திய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனித உடலில், கணையப் பகுதியில் சுரக்கும் "இன்சுலின்' ஹார்மோன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. "இன்சுலின்' சுரக்க, "கால்சியம் மற்றும் விட்டமின் டி' அவசியம். இவற்றின் அளவு குறையும் போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு உயர்ந்து, "நீரிழிவு நோய்' ஏற்படுகிறது.

              
                 மாலை நேர வெயிலில் இருப்பதாலும் உடலில் "விட்டமின் டி' உற்பத்தி செய்யப்படுகிறது. புதுடில்லி போர்டிஸ் ஹாஸ்பிடல் மருத்துவர்கள் குழு ஒன்று இது பற்றிய ஆய்வில் ஈடுபட்டது. ரத்தத்தில் உள்ள சர்க்கரைக்கும், வெயிலுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.

           ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் அனூப் மிஸ்ரா இது குறித்து கூறியதாவது: இன்றைய அளவில், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். கால்சியம் மற்றும் விட்டமின் டி குறைபாடுகள் தான் இதற்கு காரணம்.


           மாலை நேரத்தில், வெயிலில் காய்பவர்களுக்கு அல்லது விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்பவர்களின் உடலில் விட்டமின் டி உற்பத்தியாகும் என கூறப்படுகிறது.  






         இது பற்றி, "போர்டிஸ்' மருத்துவமனையில் உள்ள 184 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 92 பேர் இரண்டாம் வகை நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்கள்.

              ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது, பாலினம் மற்றும் உடல் எடை போன்றவை கணக்கெடுக்கப்பட்டன. அனைவரும் "விட்டமின் டி' குறைபாடு உடையவர்கள். மாலை நேரங்களில் இவர்களை விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுத்தினோம். அதன்பின், அவர்கள் உடலில் "விட்டமின் டி' அளவு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாலை வெயிலில் 30 நிமிடங்கள் இருந்தால், தேவையான "விட்டமின் டி' நமக்கு கிடைக்கும். இது பற்றி மேலும், தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு மிஸ்ரா கூறினார்.
 
 

No comments:

Post a Comment