25.முதல்நாள் சமைத்த உணவுப்பொருட்களை மறு நாள் உண்ணக்கூடாது.ஏன்?
சித்தமருத்துவத்தில் நோயில்லாது வாழ முதல் நாள் சமைத்த உணவுப்பொருட்களை மறு நாள் உண்ணக்கூடாது என கூறப்படுகிறது.இதற்கான அறிவியல் விளக்கத்தை காண்போம்.
ஒரு வேளை சமைத்த உணவினை மறுவேளை
உண்ணும்போது,சூடு செய்து சாப்பிடும் பழக்கம் ம்மிடையே உள்ளது.சூடு செய்யும்போது, நோய்கிருமிகள் அழிகின்றன என காரணம் கூறப்படுகிறது.ஆனால்,உண்மையில் அவை அழிந்தாலும் அவற்றின் நோய்பொருட்கள் அழிவதில்லை.
Listeria monocytogenes, Clostridium botulinum or Bacillus cereus போன்ற பாக்டீரியாக்கள் அதிகபட்ச வெப்ப நிலையில் அழிந்தாலும் இவற்றின் நச்சுப்பொருட்கள் அழிவதில்லை.
Staphylococcus aureus பாக்டீரியாக்கள் heat-stable
Toxin கொண்டுள்ளன.இவை உணவு நஞ்சினை உருவாக்ககும்.
எனவேதான், முதல்நாள் சமைத்த உணவுப்பொருட்களை மறு நாள் உண்ணக்கூடாது.