Total Pageviews

Sunday, November 28, 2010

11.“பெருந்தாகம் எடுக்கினும் பெயர்த்து நீர் அருந்த்தோம்.”-ஏன்? கழிச்சல்,அதி வியர்வையினால் பாதிக்கப்பட்டவர்கள் நீரை மட்டும் அதிகம் அருந்தக் கூடாது.ஏன்?

11.“பெருந்தாகம் எடுக்கினும் பெயர்த்து நீர் அருந்தோம்.”-ஏன்?
கழிச்சல்,அதி வியர்வையினால் பாதிக்கப்பட்டவர்கள் நீரை மட்டும் அதிகம் அருந்தக் கூடாது.ஏன்?
   
                தேரன் பிணி அணுகாவிதியிலே,மிகு தாகம் ஏற்படும்போது அதிக அளவு நீர் அருந்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.அதே போல், கழிச்சல்,அதி வியர்வையினால் பாதிக்கப்பட்டவர்களும் வெறும் தண்ணீரை மட்டும் அதிக அளவு அருந்தக் கூடாது என்பதே வழக்கு.

      இவைகளுக்கான அறிவியல் விளக்கத்தினை காண்போம்:
                                                நவீன உடலியங்கியல் தத்துவப்படி,தாகம்,கழிச்சல்,அதி வியர்வை போன்ற நிலையில் உடலில் திரவ இழப்பு ஏற்படும்.அவ்வாறு, திரவ இழப்பு ஏற்படும்போது. உடலிலிருந்து உப்புச் சத்துக்கள்ம் வெளியேற்றப்படும்.

    இந்த சூழலில் வெறும் தண்ணீர் மட்டும் அதிக அளவில் குடிக்கும்போது,சிறு நீர் சுத்திகரிப்பு குழலில் உப்பை சம நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு திரவ இழப்பு மேலும் அதிகப்படும் நிலை உருவாகும்.



     சமயல் உப்பு, ORS எனச் சொல்லப்படும் உப்புச்சத்து கலந்த நீரை பருகும் வேளை,உடலின் உப்பு சத்து சம நிலையடைவது மட்டுமல்லாமல்,மேலும் திரவ இழப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது,

எனவேதான் கழிச்சல்,அதி வியர்வையினால் பாதிக்கப்பட்டவர்கள் நீரை மட்டும் அதிகம் அருந்தக் கூடாது.


No comments:

Post a Comment