Total Pageviews

Sunday, November 28, 2010

10.வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது. ஏன்?

10.வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது. ஏன்?

     பூமியானது சூரியனிடமிருந்து வெளிவரும் மின்சார சக்த்தி மூலம் காந்த சக்தியை அடைகிறது.பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது,அதனால் உண்டாகின்ற மின்சார சக்தியானது,பூமியில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்கிறது.அந்த சக்தி செல்லும் திசைக்கு வடக்கில் பூமியின் வடதுருவம் இருப்பதால் அது காந்ததின் வட துருவமாகிறது.இவ்வாறே,பூமியின் தென் துருவம் காந்தத்தின் தென் துருவமாகிறது.

ஆதலால்,பூமி  பெருங்காந்தமாகின்றதே.இதனை நீருபிக்க ஒரு காந்த்த ஊசியை எப்படி தொங்கவிட்டாலும்.அது வடக்கு-தெற்காகவே நிற்கக் காணலாம்.இதனையே,இயற்பியல் நூல்கள் மின்காந்த புலம்,காந்த திச்சைகளின் ஈர்ப்பு ம்ற்றும் எதிர்ப்புப் பற்றி விளக்குகின்றன.காந்த ஊசியானது வடக்கு தெற்காக நிற்பதற்க்குக் காரணம்,காந்தத்தின் வடக்கு பூமியின் தென் துருவத்தாலும்.தெற்கு பூமியின் வடக்கு துருவத்தினாலும் இழுக்கபடுதலே காரணம்.


   இதைபோலவே மனித சரீரத்திலும் காந்த சக்தி உள்ளது.உடலில் இரத்ததில் முகிய பாகம் இரும்பு சத்தாகும்.மேலும் பகலில் உட்காரும்போதும், நடக்கும்போதும் அடையும் காந்த சக்த்தி உடலின் பல பாகங்களிலும் பரந்து விளங்கும்.

நாம் ஊன்றி பார்த்தோமேயானால்,பொதுவாக சரீரத்தின் வட துருவம் – தலை.தூங்கும் போது தெற்கே தலை வைத்து கொண்டால், நமது வடதுருவமும்,பூமியின் தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு, சரீரத்தின் காந்த சக்தி கெடாமல் இருக்கும்.இதற்கு மாறாக.வடக்கில் தலை வைத்துக் கொண்டால்,பூமியின் வட துருவம் நமது வடதுருவத்துடன் சேராது.ஒன்றையொன்று தாக்கி,தொடர்ச்சியாக உடலுக்கு காந்த சக்தியை அளிக்காது.உடலுடைய இயற்கையான நிலை மாறுபடும்
   
                                    எனவேதான்,வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது.

No comments:

Post a Comment