Total Pageviews

Monday, November 29, 2010

21.தானிய வகைகளை ஈரப்பதம் படாமல் மூடியே வைக்க வேண்டும் ஏன்?

21.தானிய வகைகளை ஈரப்பதம் படாமல் மூடியே வைக்க வேண்டும் ஏன்?
 
                                                                                                       தானிய வகைகளை அறுவடை செய்யும்போதும்,சேமித்து வைக்கும்போதும் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.


       இவை மூலம் அத்தானிய வகைகளில் Aflatoxins என்கிற நச்சுப்பொருட்கள் உண்டாகின்றன,13 வகையான இவைகளில் பி1 வகை மிகவும் நச்சுத்தன்மை உடையது.


       இவை Aspergillus பூஞ்சையாலே உண்டாகின்றன.
  

       இவை DNA and RNA உருவாக்கத்திற்கு தேவையான protein உருவாவதை தடுக்கின்ற்ன.



     
மேலும் புற்று நோயையும் உண்டாக்குவதாக அறியப்பட்டுள்ளது.

       மேலும் ஈரல் நச்சாக செயல்படுகிறது. ஈரல் சிதைவு,காமாலை,வலி,வாந்தி,காய்ச்சல்,கைகால் வீக்கம் போன்றவை அறிகுறிகள் ஆகும்.



      எனவேதான் தானிய வகைகளை ஈரப்பதம் படாமல் மூடியே வைக்க வேண்டும்.

 

No comments:

Post a Comment