24.அன்னபேதியை மருந்தாக முடிக்கும்போது எலுமிச்சை பழச்சாற்றில் செய்வது ஏன்?
சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட இரும்புசத்துமிக்க அன்னபேதியை சுத்தி செய்யும்போதும் மருந்தாக முடிக்கும் போதும் எலுமிச்சைபழச்சாறை பயன்படுத்தி செய்யப்படுகிறது.அதற்கான நவீன அறிவியல் விளக்கத்தினை காண்போம்.
“The role of vitamin C in iron absorption” இக்கட்டுரையில் இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவது குறித்து Hallberg L, Brune M, Rossander L. குறித்து தெளிவாக விளக்குகின்றனர்.
ஆதாரம்: PMID: 2507689 [PubMed - indexed for MEDLINE].
இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவது இரு காரணங்களை பொருத்தது.
1.வலுவூட்டும் காரணிகள் - ascorbic acid, meat/fish
2.தடை செய்யும் காரணிகள் - phytates, tannins
இவற்றில் இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவதில் ascorbic acid பணி உறுதிசெய்யப்பட்டுள்ளது, ascorbic acid இரண்டு வழிகளில் பணியாற்றுகிறது.
1. insoluble and unabsorbable iron compounds உருவாகுவதை இது தடைசெய்கிறது.
2. உடலில் விரைவில் அகத்துறிஞ்சப்படுவதான நிலையான
ferrous iron நிலை உருவாக்கின்றது.
எலுமிச்சை பழச்சாற்றில் ascorbic acid அதிகளவில் உள்ளதால்,விரைவில் அன்னபேதியிலுள்ள இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுகிறது.
எனவேதான், அன்னபேதியை மருந்தாக முடிக்கும்போது எலுமிச்சை பழச்சாற்றில் பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment